விஜயக்கு அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ்!

விஜயக்கு அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ்! 
ஒரு காலத்தில், சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். "டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த போது, டைரக்டர் பாக்யராஜை திருமணம் செய்து, பூர்ணிமா பாக்யராஜ் ஆனவர், நடிப்புக்கும் முழுக்கு போட்டார்.
vijay-kku-amma-poornima-bakkiaraj

அதன் பின், தன் மகன், மகள் இருவரும் நடிக்க வந்த போது கூட, நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவரை, "ஆதலால் காதல் செய்வீர்படத்துக்காக, மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் சுசீந்திரன்.

அதையடுத்து, மகன் சாந்தனு நடிக்கும்,"வாய்மை படத்தில் நடித்து வந்த பூர்ணிமா, இப்போது விஜய் நடித்து வரும், "ஜில்லா படத்தில் அவருக்கு அம்மாவாகவே நடிக்கிறார்.

அது மட்டுமின்றி மோகன்லாலுக்கு மனைவி வேடம். இதைத் தொடர்ந்து மேலும்,  சில படங்கள் பூர்ணிமா பக்கம் திரும்பியுள்ளன.
Previous
Next Post »