| உலகத்திலேயே முதல் முறையாக விவாகரத்து தொகையாக 6100 ரூபாய் கொடுத்த அமெரிக்கர்..! | ||
இதுதான் தற்போதைய நடைமுறை. அந்த வகையில் அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் 28 வயது மனைவியை விவாகரத்து செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் ஆறாயிரத்து நூறு கோடி ரூபாய் கட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதியில் ‘கான்டினென்ட்ல் ரிசோர்சஸ்’ என்ற எண்ணெய் நிறுவனம் உள்ளது. இதன் தலைமை நிர்வாகி ஹரால்ட் ஹேம். இந்நிறுவனத்தின் 68 சதவீத பங்குகளை இவர் வைத்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர் ஆகும்.
இவரது மனைவி சூ ஆன் அர்னால். 26 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப்பின் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து பெற முடிவு செய்து வழக்கு தொடர்ந்தனர். அமெரிக்காவின் ஒக்லஹாமா கவுண்டி நீதிமன்றம் இந்த விவாகரத்து வழக்கில் தீர்ப்பளித்தது. இதில் அர்னாலுக்கு 975 மில்லியன் டாலர் (ரூபாய் 6 ஆயிரத்து 100 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதையடுத்து அர்னாலுக்கு 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கான காசோலையை ஹரால்ட் ஹேம் அனுப்பி வைத்தார். உலக வரலாற்றிலேயே விவாகரத்து வழக்கில், இது மிகப்பெரிய இழப்பீட்டு தொகையாக கருதப்பட்டது.
இந்த பணத்தை வைத்து வாழ்நாள் முழுவதும் ஒரு பணக்கார வாழ்க்கையை அர்னால் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் கூடுதல் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய அர்னாலும், அவரது வக்கீலும் முடிவு எடுத்தனர்.
எனினும் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைக்கு பின், சுமூக முடிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஒக்லஹாமா சிட்டி பேங்கில் அந்த செக் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அர்னால் இழப்பீடு தொகை குறித்து எதுவும் ஆப்பீல் செய்யமாட்டாரென்று ஹரால்டின் வழக்கறிஞர் கிரைக் பாக்ஸ் தெரிவித்தார்.
ஹரால்ட் தனது மனைவி அர்னாலுக்கு இதற்கு முன்பே 20 மில்லியன் டாலர் கொடுத்திருப்பதும், இரண்டு பேரும் வழக்குக்காக மில்லியன் கணக்கில் பணம் செலவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ConversionConversion EmoticonEmoticon