| பிரான்சில் தீவிரவாதிகள் அட்டூழியம்..! | ||
இந்த இரு தாக்குதல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்துவந்த வேளையில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய ஒரு குற்றவாளி போலீசில் சரண் அடைந்தான்.
மீதமுள்ள தீவிரவாதிகளை போலீசார் தேடிவந்த நிலையில், பிரான்சின் கிழக்கு பகுதியில் உள்ள கோஷர் பல்பொருள் அங்காடிக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதி அங்கிருந்த பொதுமக்களை சிறைபிடித்துள்ளான்.
அந்த தீவிரவாதி இரு இயந்திர துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், நேற்று பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவன் இவனாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதையடுத்து, அந்த பகுதியை பிரெஞ்சு காவல்துறையினர் தற்போது சுற்றி வளைத்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாக அந்த பல்பொருள் அங்காடியின் மேற்பரப்பில் தீவிர வான்வழி ரோந்துப் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ConversionConversion EmoticonEmoticon