கூலித் தொழிலாளி மகன் படைத்த சாதனை: மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பம்

ஆந்திராவை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனுக்கு ரூ.79 லட்சம் சம்பளத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.

கம்மம் மாவட்டம் போரூர் கிராமத்தை சேர்ந்த சேக் ஜமாலுதீன், மனைவி ரகீமா பேகம், இவர்களுக்கு 2 மகள்களும், நசீர்பாபா என்ற மகனும் உள்ளனர். சேக் ஜமாலுதீன் கிரானைட் நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளியாக மாதம் ரூ.5 ஆயிரம் வருமானத்திற்காக வேலை பார்க்கிறார்.
79 laksh salary boy

குடும்பத்தை காப்பாற்ற இந்த வருமானம் பற்றாக்குறையாக இருந்ததால் மனைவி தையல் வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவர்களது மகன் நசீர்பாபாவுக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்வம் இருந்தது.

நசீர்பாபா 10ம் வகுப்பு வரை இலவசமாக நவோதயா பள்ளியில் படித்த அவன், 10–ம் வகுப்பில் 600–க்கு 587 மதிப்பெண் பெற்று மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்வாகியுள்ளான்.

பின்னர் 12ம் வகுப்பில் 1000–க்கு 969 மதிப்பெண் பெற்ற அவன், ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் 239வது இடத்தினை பெற்று கான்பூர் ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல் 2–வது ஆண்டு படித்து வருகிறான்.

அப்போது அமெரிக்காவில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனமான ஆராக்கிள் நிறுவனம் கல்லூரியில் வளாக தேர்வு நடத்தியதில் நசீர்பாபா தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் ரெட் உட் சிட்டியில் உள்ள கம்பெனியில் அவருக்கு ரூ.79.18 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கி உள்ளது.

நசீர்பாபாவுக்கு கிடைத்த வேலையையடுத்து, எனது மகன் மூலம் எங்கள் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்தது என்று சேக் ஜமாலுதீன் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

இதுபற்றி நசீர்பாபா கூறுகையில், எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆகியோர் உதவியால் தான் என்னால் படிக்க முடிந்தது என்றும் எனது குடும்பத்தையும், என் சகோதரிகளையும் நல்ல படியாக வாழ வைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Previous
Next Post »