போலீஸ் போர்வையில் உலவும் காம கொடூரர்கள் ! பெண்களே உஷார்!


இந்த காலத்தில் பெண்கள் மிக உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்கள் என்றாலே போக பொருளாகதான் ஆண்கள் நினைக்கின்றனர்.

பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து கொல்வதில் கில்லாடிகளாக இருக்கின்றனர் சில காம கொடூரர்கள்.

இப்படிதான் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மெரீனா பீச்சில் காதலர்கள் இருவர் தனியே பேசிக்கொண்டிருக்கும்போது, தங்களை போலீஸ் என கூறி  ஒரு கூட்டம் தனியாக அழைத்து சென்று, அந்த பெண்ணை கற்பழித்து குதறியிருக்கிறது.

தனியாக பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம் தனியாக இங்கே நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் எனவும்,  இந்த பகுதி பாதுகாப்பானது இல்லை என்று கூறி அவர்களை ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளது.

அங்கு காதலனை கட்டி போட்டுவிட்டு, காதலன் முன்னால் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து மாறி மாறி கற்பழித்து வீட்டு, அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறது.

மயக்கம் தெளிந்த அந்த பெண் காதலனை கட்டவிழ்த்துவிட்டு, அங்கிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மோசமான நிலையில் இருந்த அப்பெண்ணை அருகில் இருக்கும் அரசு மருத்ததுவமனையில் சிகிச்சைக்காக போலிசார் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலர்களை கடத்திய கூட்டம் தங்களை போலீஸ் என கூறியுள்ளது. ஆனால் உண்மையிலேயே போலிசார் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் அங்கங்கே அரங்கேறிகொண்டுதான் இருக்கிறது.

பெண்களே உஷார்... காதல் செய்ய எத்தனையோ நல்ல இடங்கள் உள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பார்க், பீச்களில் உட்கார்ந்து மனமார பேசலாம்.

அதைவிட்டவிட்டு, தனிப்பட்ட பகுதிக்கு சென்று பேசினால் கற்புக்கு உத்தரவாதம் இல்லை.

காமகொடூரர்கள் அங்கங்கே உலவிக் கொண்டுள்ளனர். ஏதாவது ஒரு போர்வையில் அவர்களால் உங்களுக்கு ஆபத்து வரலாம்.

காதலன் காப்பாற்றுவான் என்ற வெற்று கனவெல்லாம் வேண்டாம். அது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
கண்முன்னே கற்பை சூறையாடும்போது காதலனால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது.
உங்களுடைய காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் திருட்டு தனமாக சந்தித்து பேசுவதை தவிர்க்கவும். 

உண்மையான காதல் என்றால் பரஸ்பரம் வீட்டில் தெரிவித்துவிட்டே வெளியில் சந்தித்து பேசலாம்.

அது பாதுகாப்பானதாக இருக்கட்டும்.

காதலன் அழைக்கிறான் என தனியான இடத்திற்கு, தங்கும் விடுதிக்கோ சென்றால் கற்புக்கு ஒருபோதும் உத்ரவாதம் கிடையாது.

காதலர்கள் என்ற போர்வையில் இளைஞர்கள் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை கற்பழித்து சீரழித்த நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

எனவே பெண்களே.. உஷார்.. நீங்கள் எச்சரிக்கை உணர்வுடன் ஆண்களிடம் பழகினால் ஒழிய உங்கள் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். சினிமாவில் வருவதுபோல வசனம் பேசும் எந்த ஒரு இளைஞனையும் நம்பாதீர்கள்.

3 மணி நேரத்தில் முடிந்துபோவதல்ல வாழ்க்கை. முழுமையாக 100 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கை.

உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்படி அமையட்டும். தான்தோன்றிதனமாக யாரையோ நம்பி, காதலன் என நினைத்து, காலம் எல்லாம் கண்ணீர் விடும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்காதீர்கள்.

காதலிப்பது தவறென்று கூறவில்லை. காதலிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும் என கூறுகின்றேன்.


காதல் என்ன மாய மந்திரமா? நினைத்தால் வந்து போவதற்கு. அது ஒரு உணர்வு. மனதில் ஆழ பதிந்து வெளிப்படும் ஒரு அற்புதமான உணர்வு அது. அதில் வழிபோக்கர்களுக்கு இடமில்லை. 

உடன் வாழ விரும்புவர்களுக்கு மட்டுமே இடம் என உறுதியுடன் இருங்கள். இல்லையென்றால் மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் இடம்பெற்ற நிலைமை உங்களுக்கும் வரக்கூடும்.

பெற்றோரை நினைத்து பாருங்கள்.

காதலிக்கும் முன்பு பெற்றோரை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்... உங்களை பெற்றெடுத்த அவர்கள் உங்களுக்கான நல்ல துணையை தேடி தருவார்கள். அதற்கான காலச் சூழல் வரும்போது கண்டிப்பாக உங்களுக்கான வாழ்க்கை துணை அமையும். அதுவரை உங்கள் எதிர்காலத்திற்கான பயணத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

திரைப்படங்களைப் பார்த்து மனதை கெடுத்துக்கொள்ளும் பெண்களே இன்று பெரும்பாலும் காதல் செய்பவர்களாக இருக்கிறார்கள். அதில் மனதை ஈடுபடுத்தி, வெள்ளித் திரையில் காண்பவற்றையெல்லாம் மனதில் பதித்து தம்மையும் அதுபோல் உருவகித்துக்கொள்கிறார்கள்.

இதனாலேயே யார் என்ன கூறினாலும், தாம் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்குவதில்லை. பிறகு காதலனுடன் ஊர் சுற்றிவிட்டு, செய்யக்கூடாத தவறையெல்லாம் செய்துவிட்டு, ஆபத்து என்றிடும்போது மட்டுமே பெற்றோர்கள், உறவினர்கள் நினைவுக்கு வருகின்றனர்.

அது காலம் கடந்த சிந்தனை. அவ்வாறு பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் இப்போது நினைப்பது என்ன தெரியுமா? காதல் செய்யாமல் இருந்திருந்தால் பெற்றோர்களுடன் ராஜ மரியாதையுடன் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கலாம்.

செல்லப் பிள்ளையாக வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கலாம். இந்த மோசமான நிலையை தவிர்த்திருக்கலாம். வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என உள்ளுக்குள் அழுது புலம்பிக்கொண்டுள்ளனர்.

அதுபோன்ற நிலைமை உங்களுக்கு வர வேண்டுமா என்ன? உங்கள் எதிர்காலம் பொன்னானதாக மாற வேண்டுமெனில் உங்களுடைய கல்வி, தொழில், திறைமை வளர்த்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளுங்கள்.

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு என்று கூறியிருந்தேன். ஆனால் அந்த உணர்வை அனுபவிக்கும் காதலர்கள் இன்று உள்ளார்களா என தெரியவில்லை. 99.99 சதவிகிதம் இனக் கவர்ச்சி காதலே இன்று ஆதிக்கம் செலுத்துகிறது. 

குறிப்பாக உருவம் பார்த்து ஆளை தேர்ந்தெடுக்கிறார்கள். உள்ளத்தை பெரும்பாலும் பார்ப்பதிலை. உதட்டில் வழியும் தேனொழுகும் வார்த்தைகளுக்கு மயங்கி போகிறார்கள் பெண்கள்.

ஒருவன் ஹீரோ போல டிரஸ் செய்துகொண்டு, டிப்டாப்பாக ஒரு டூவீலரில் வந்தால் போதும். அவனையே தன்னுடைய மானசீக காதலானாக, கணவனாக நினைத்துக்கொள்ளும் பெண்களே இன்று ஏராளம்.

இப்படிபட்ட உணர்வுகளை தருவது இனக்கவர்ச்சியும், உடல் கவர்ச்சியுமே தவிர, காதலல்ல...

உண்மையான காதல் மனதை பார்த்து வருவது. அவன் கூன்னாக இருக்கலாம்.. குருடனாக இருக்கலாம்... நல்ல பதவியில் இருக்கலாம். ஆனால் மனது எப்படிபட்டது என்பதையே முழுமையாக புரிந்துணர்ந்து, காதலித்தால் என்னென்ன பிரச்னைகள் உருவாக கூடும், அப்படிபட்ட பிரச்னைகளை சமாளித்து வாழ்க்கையில் வெல்ல முடியுமா?

பொருளாதாரத்தில் எந்தளவிற்கு வளர முடியும்? என்னென்ன சாதிக்க முடியும் என்ற எண்ணங்களை உள்வாங்கி, அதற்கேற்ப முடிவு செய்து, அதன் பிறகே காதலிக்க வேண்டும். தங்கள் காதலை மனதில் வைத்துக்கொண்டே, பெற்றோர்களிடம் கூறி சம்மதம் பெற வேண்டும்.

பெற்றோர்களிடம் சம்மதம் பெறாத எந்த ஒரு காதலும் வெற்றிபெறுவதில்லை. பெற்றோர் அனுமதியுடன் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே காதல் என்ற தோணியில் ஏற வேண்டும்.

குடும்ப சூழலை நன்றாக அறிந்துகொண்ட ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தெரியும் தங்களது காதல் நிறைவேறுமா இல்லையா என்பது.

எனவே தீர்மானித்து, அதன் பிறகு காதல் செய்வது நல்லது. ஆனால் இக்காலத்தில் இதுபோன்ற காதல்கள் சாத்தியமே இல்லை. காரணம் "இனக் கவர்ச்சி" யே இன்று முதன்மை படுத்தபடுகிறது.

இனக்கவர்ச்சியின் எல்லையே மாறாத காதல் போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் திருட்டு தனமாக உறவு கொண்ட பிறகு காதலின் வலிமை குறைகிறது. அவர்களின் தேவை நிறைவேறிய பிறகு சில நாட்களிலேயே வெறுப்புணர்வு மேலோங்குகிறது.

விளைவு?

பிரிதல் தொடங்கிவிடுகிறது. பின்விளைவுகளை தேட ஆரம்பிக்கிறது மனது. இறுதியில் ஆணோ, பெண்ணோ, யாராவது ஒருவர் தங்களின் சூழலை உணர்ந்து இது சாத்தியப்படாது பிரிந்துகொள்வோம் என்கின்றனர்.

குறிப்பாக பணக்கார பெண்கள் - ஆண்கள் இவ்வாறு  கூறிவிட்டு நடையை கட்டுகின்றனர். இயலாதவர்கள் இதனால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இப்படிபட்ட தற்கொலைகள் எத்தனையோ நடைபெற்றுள்ளன.

எனவே, பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். காதலில் விழுந்தால் கயவர்களால் கற்பழிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும், சில நேரங்களில் காதலர்களால் கற்பு சூறையாடப்படும். சில நேரங்களில் சம்மதத்துடன் கற்பை கொடுக்க வேண்டியிருக்கும்.

எப்படியிருந்தால் பாதிப்பு என்பது அதிகமாக பெண்களுக்குத்தானே ஒழிய ஆண்களுக்கு இல்லை.

ஆண்கள் மட்டும்தான் ஏமாற்றுவார்களா? பெண்களும் ஏமாற்றுவார்களே.. ஆண்களுக்கு மட்டும் கற்பில்லையா? என கேட்கும் சில ஆணாதிக்க சமூகமும் இருக்கிறது.

நான் மேற்குறிப்பிட்ட 99.99 சதவிகிதம் பெண்களுக்கு பாதிப்பு என்றால், 00.01 சதவிகித பாதிப்பு ஆண்களுக்கு உள்ளது. மறுப்பதற்கு இல்லை. பெண்களே கற்பால் பாதிக்கப்பட்டு, சீரழிகிறார்கள் என்பதே உண்மை.

இளம் பெண்களே... உஷாராக இருந்து விடுங்கள். காதலும் வேண்டாம்... கத்தரிக்காயும் வேண்டாம்.. பெற்றோர் ஆதரவுடன் கூடிய நல்ல கல்வி, அதற்கேற்ற வேலை, அதிலிருந்து கிடைக்கும் வருமானம்,  அதற்கடுத்து நல்ல வாழ்க்கைத் துணையுடன் கூடிய வாழ்க்கை என உங்களை மேம்படுத்தி தயார்படுத்திக்கொள்ளுங்கள்...

வாழ்க்கையில் வளம் பொங்கும்....! இனிமை நிலைத்திருக்கும்..!

- ஹாட் மாமு வலை இதழுக்காக

உங்கள்
-தங்கம்பழனி. 
www.thangampalani.blogspot.com





Newest
Previous
Next Post »