உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ, பொல்லார்ட் நீக்கம்?

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14-ந் தேதி முதல் மார்ச் 29-ந் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
west indies cricketer

அணி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வீரர்கள் சங்க முன்னாள் தலைவருமான ராம் நரைன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

2015-ம் ஆண்டு உலக கோப்பை' போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் கேப்டன் வெய்ன் பிராவோ, ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் ஆகியோர் இடம் பெறமாட்டார்கள்’ என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த தகவலை தெரிவித்தது யார் என்பதை வெளியிட மறுத்துள்ள ராம் நரைன், இது உண்மையான தகவல் என்றும் கூறியுள்ளார்.

ராம் நரைன் வெளியிட்டுள்ள தகவல் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதற்கு அதனை உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை.

கடந்த அக்டோபர் மாதம் சம்பள பிரச்சினை காரணமாக வெய்ன் பிராவோ தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய தொடரை பாதியில் ரத்து செய்தது பலத்த சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவம் எதிரொலியாக அவரிடம் இருந்து கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Previous
Next Post »