| ஷாம், ஸ்ரீகாந்த் எனக்கு எதிரிகள் - பரத் பேட்டி | ||
star badmintonஇதன் அறிமுகவிழா சென்னை போரம் விஜயா மாலில் நடைபெற்றது. விழாவில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பாடல்களைப் பாடினார்கள். நடன இயக்குநர் அமைப்பில் நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஸ்டார் பேட்மிண்டன் லீக்கில் கலந்து கொள்ளப் போகும் அணிகள் அறிமுகப் படுத்தப் பட்டன.
‘சென்னை ஃப்ளிக்கர்ஸ்’ (Chennai Flickers ) அணியின் தலைவரும், உரிமையாளருமான நடிகர் ஸ்ரீகாந்த், ‘என் ப்ரண்டப் போல யாரு மச்சான் ‘பாடலைப் பாடி ஆரம்பித்தார்.
தொடர்ந்து ஸ்ரீகாந்த் பேசும் போது, ”இன்று மதத்துக்குப் பிறகு எல்லாராலும் பேசப்படுவது விளையாட்டுதான். எல்லாரையும் இணைப்பதும் விளையாட்டுதான். கிரிக்கெட் வளர்ந்து விட்ட இந்தச் சூழலில் பேட்மிண்டனுக்கு முக்கியத்துவம் தரும் இம் முயற்சி வரவேற்புக்குரியது.
பெரிய கட்டடத்துக்கான முதல் செங்கல் இன்று எடுத்துவைக்கப் பட்டிருக்கிறது. இது பெரிதாக வரும்; வளரும். மற்ற அணியின் தலைவர்கள் பரத், ஷாம் எல்லாரும் என் நண்பர்கள்தான். ஆனாலும் இது சரியான போட்டியாக இருக்கும்..!” என்றார்.
star badmintonஅடுத்த அணியான ‘சென்னை ஸ்மாஷர்ஸ்’ (Chennai Smashers) உரிமையாளரான நடிகர் பரத் பேசும் போது
“ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன். இந்த பேட்மின்டன் போட்டியில் எனக்கு அணித்தலைவர் பொறுப்பு தந்ததற்கு நன்றி.
என்னுடன் மோதும் ஷாம், ஸ்ரீகாந்த் இருவருமே எனக்கு சகோதரர் போன்றவர்கள். நண்பர்கள் போன்றவர்கள். இப்போது எதிரிகளாகி விட்டார்கள். ஆனால் எங்களுக்குள் போட்டி இருக்கும்; வேறுவழியில்லை ஆரோக்கியமான போட்டி இருக்கும். . ” என்றார்.
முன்றாவது அணியான ‘சென்னை ராக்கெட்ஸ்’ (Chennai Racquets) அணியைச் சேர்ந்த ஷாம் பேசும் போது…
“இந்த முயற்சியில் இறங்கியுள்ள கணேஷ் இதற்கு முன் ஸ்டார் கிரிக்கெட் நடத்தினார். சின்னத்திரை நட்சத்திரங்களையும் வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் கிரிக்கெட்டில் மோதவிட்டார். ‘பாண்டிச்சேரி’யில் நடத்திய அந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டேன்.
பிரமாண்டமாக நடத்தினார். பிரமாதமாக வெற்றியும் பெற்றார். ஒரு சாரிட்டிக்காக அதில் வசூலானதை எங்கள் முன்பாக அதே மேடையிலேயே கொடுத்தார். அப்படிப்பட்ட நல்ல இதயம் உள்ளவர் அழைத்ததால் மூன்று பேருமே மறுக்காமல் ஒப்புக் கொண்டோம்.
ஏதோ நடித்தோம் போனோம் என்ற இல்லாமல் நாமும் நல்ல விஷயங்களில் ஈடுபட வேண்டும் நல்ல விஷயங்களில் இடம் பெற வேண்டும் என்று நான் உடனே ஒப்புக் கொண்டேன்..!” என்றார்.
இந்த ‘ஸ்டார் பேட்மிண்டன் லீக் 2015′ ஜனவரியில் ‘சென்னை போரம் விஜயா மாலி’ல் நடைபெறவுள்ளது.

ConversionConversion EmoticonEmoticon