| உங்கள் புத்தாண்டு சபதம் என்ன? | ||
திரும்பிப் பார்த்தால், அசைபோட நிறைய நினைவலைகள் எல்லோருக்குமே இருக்கும்.
புத்தாண்டில் அடியெடுத்து வைக்க தயாராகிவிட்ட நமக்கு முதலில் பொறி தட்டுவது 'இந்த ஆண்டுக்கான சபதம்'. இது வெறும் சம்பிரதாயம்தான் என்று உள் மனது ஏளனம் செய்தாலும்கூட, நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள இதைவிட பெரிய வாய்ப்பு நமக்கு தெரிவதில்லை.
எனவேதான், முதல் முயற்சியாக புத்தாண்டு விடியும் போது புது சபதம் போடத் தவறுவதில்லை.
அது சிகரெட்டை நிறுத்துவதாக இருக்கலாம், இல்லை பிடித்தவருடனான ஒரு நிலவொளி நடைபயணமாக இருக்கலாம், கொஞ்சம் சீரியஸாக ஏதோ சமூக சேவையாக இருக்கலாம். அனைத்தையும் பட்டியிலிட முடியாதல்லவா? எனவே உங்கள் 'புத்தாண்டு சபதம்' என்னவென்று இங்கே பகிருங்களேன்.
ConversionConversion EmoticonEmoticon