| காபி வித் டிடி நிகழ்ச்சியா? தலைதெறிக்க ஓடும் நடிகர்கள்..! | ||
இதில் மேல்தட்டு ஹீரோக்கள் விசயத்தில் கொஞ்சம் அடக்கிவாசிக்கும் அவர், இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு நடிகர்-நடிகைகளை ஒரு பிடி பிடித்து விடுகிறார். முக்கியமாக, முதலில் இந்த மாதிரி எளிமையான கேள்விகள்தான் கேட்பேன் என்று சொல்லும் திவ்யதர்ஷினி,
நிகழ்ச்சி நன்றாக போய்க்கொண்டிருக்கும்போது சில எக்குத்தப்பான கேள்விகளையும் கேட்டு அவர்களை தடுமாற வைத்து விடுகிறாராம். சிலரை படங்களில் அவர்கள் நடித்த கேரக்டர்களை நினைவுபடுத்தி பட்டப்பெயர் வைக்கும் அவர், நடிகைகளுடன் அவர்களை இணைத்து வெளியான கிசுகிசுக்கள் பற்றியும் கேள்வி கேட்டு, அவர்களை சரியான பதில் கொடுக்க முடியாமல் திணற வைக்கிறாராம்.
அதோடு, அவர்கள் அந்த விசயத்தை தட்டிக்கழிக்க நினைத்தாலும், அவர்களை தடுமாற வைத்து வேடிக்கை பார்க்கும் வகையில் அதைப்பற்றியே திரும்பத்திரும்ப கேள்வி மேல் கேள்வி கேட்டு சிக்க வைத்து விடுகிறாராம் அவர்.
இதனால் திவ்யதர்ஷினி அழைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்-நடிகைகள் அலறிக்கொண்டுதான் ஓடி வருகிறார்கள்.

ConversionConversion EmoticonEmoticon