| காவிய தலைவன் - சினிமா விமர்சனம் | ||
நாடகசபை நடத்தி வரும் சிவதாஸ் சுவாமிகளிடம் (நாசர்) சிஷ்யர்களாக இருக்கிறார்கள் காளியப்ப பாகவதரும் (சித்தார்த்), கோமதி நாயகம் பிள்ளையும் (பிரிதிவிராஜ்). கோமதி நாயகத்துக்கு தானே அனைத்திலும் முன்னணியில் இருக்கவேண்டும் என்ற ஆசை.
ஆனால் அவரை விட அனைத்திலும் தகுதியாக இருப்பவர் காளியப்ப பாகவதர். அதை பொறுக்க முடியாத கோமதி நாயகம், வஞ்சகமாக சிவதாஸ் சுவாமிகளிடம் காளியப்பனின் காதல் வாழ்க்கையை பற்றி சொல்ல, காளியப்பனின் காதலுக்கும், மேடை நடிப்புக்கும் தடை போடுகிறார்.
பின்னாளில் தன் காதலி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காளியப்பர், அந்த சாவுக்கு காரணமான தன் குரு சிவதாஸ் சாமிகளுக்கே சாபம் இடுகிறார். மனமுடையும் சிவதாஸ் சுவாமிகள் மரணிக்க, தந்திரமாக காளியப்ப பாகவதரை நாடக சபையில் இருந்து துரத்தி விட்டு, நாடகத்தை எடுத்து நடத்துகிறார் கோமதி நாயகம் பிள்ளை.
ஐந்து வருடங்களுக்கு பிறகு வேறொரு சந்தர்ப்ப சூழ்நிலையில் சந்திக்கிறார்கள் காளியப்ப பாகவதரும், கோமதி நாயகம் பிள்ளையும். கடைசியில் கோமதி நாயகத்தின் கோபம் குறைந்ததா? காளியப்ப பாகவதர் என்னவாகிறார்? என்ற கேள்விகளுக்குக்கான விடைகள் 'காவிய தலைவன்' படத்தில் உள்ளது.

ConversionConversion EmoticonEmoticon