நடிகையின் கையென நினைத்து நாய் வாலை கடித்த நடிகர் ! படபடிப்பில் கலாட்டா..!

நடிகையின் கையென நினைத்து நாய் வாலை கடித்த நடிகர்! 
பொறேம்பாக்கா பொலவடு என்ற புதிய மலையாள படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. படபிடிப்பின்போது நாய், நடிகை, நடிகர் உட்பட திரைப்பட நடனக்குழு ஆடிக்கொண்டிருந்தனர். அதை இயக்கிக்கொண்டிருந்த டான்ஸ் மாஸ்டர், கதாநாயகன் நாயகியை கட்டியனைத்தவாறு அவளது கையை இலேசாக கடிக்க வேண்டும்.

அப்பொழுது காற்று பலமாக வீசியதால் நடிகையின் மாராப்பு திரை சீலை படபடவென அடித்து நடிகரின் முகத்தை மறைத்தது. இதனால் நிலை தடுமாறிய நடிகர் நடிகையை கையைப் பற்றி கடித்த போது, வீல்லென நாயின் அலறல் சத்தம் கேட்டது.

அதிர்ந்து போன படக்குழு கவனித்த போது, தவறுதலாக நடிகர் நாயின் வாலைப் பிடித்து கடித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. நாய் வலி தாங்காமல் நடிகரின் தொடையை கடித்தது.

இருவரும் மாறி மாறி கடித்துக்கொண்டதால் படபிடிப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த நாய்க்கும், நடிகருக்கும் உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்ட பிறகு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நடிகையின் கையென நினைத்து நாயின் வாலை கடித்துப் துப்பிய நடிகரால் படபிடிப்பு நடந்து கொண்டிருந்த இடமே சிரிப்பு அலைகளால் எதிரொலித்தது.

Previous
Next Post »