அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் - ரஜினிகாந்த்

அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன்தான்..! 
தற்பொழுது முன்னணியில் இருக்கு விஜய், சூர்யா, அஜீத், சிலம்பரசன், தனுஷ் போன்றவர்களே அடுத்த சூப்பர் ஸ்டார் என அவர்கள் ரசிகர் எண்ணிக்கொண்டிருக்கும்போது,
கோலிவுட்டின் வெற்றி நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்தான் அடுத்த சூப்பர் என அவரது ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர்.

இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் தான்.தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் படம் ரஜினி முருகன். இப்படத்தின் இவர் ரஜினி ரசிகராக நடிக்கவுள்ளார்.

இதற்காக ரஜினி மாதிரியே ஹேர் ஸ்டையில் வைத்துள்ளாராம்.மேலும் இயற்கையாகவே சிவகார்த்திகேயனுக்கு மூக்கு மற்றும் கண்கள் ரஜினி போல் உள்ளதாக பலர் படப்பிடிப்பில் கூற, சிவாவிற்கு குளிர் ஜுரமே வந்துவிட்டதாம்.

ஒருவேளை அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன்தான் என ரஜினி அங்கிள் சொன்னாலும் ஆச்சர்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் சிவார்த்திகேயன் ஒவ்வொரு படமும் சூப்பர் ஹிட் ஆவதோடு, அவருக்கு ரசிகர்களும் உலகமெங்கும் அதிகரித்து கொண்டுள்ளனர்.

இந்த செய்தியால் முன்னணி நாயகர்களுக்கு குளிர் ஜூரம் வராமல் இருந்தால் சரிதான்...!
Previous
Next Post »