| 5 வயது மகளை பாலத்திலிருந்து வீசி கொன்ற தந்தை கைது! | ||
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வரும் 25 வயதாகும் ஜான் ஜான்சுக் தனது மனைவியை பிரிந்து தனது 5 வயது மகள் போப் உடன் வசித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை இரவு தனது காரில் அதிவேகமாக சென்ற ஜான்சுக்கை காவல்துறையினர் விரட்டிச்சென்றுள்ளனர். அப்போது தம்பா வளைகுடாவிற்கு மேலுள்ள டிக் மிசனர் பாலத்தில் தனது காரை நிறுத்திய அவர் தன் மகள் போப்பை வீசிவிட்டு வேகமாக காரில் ஏறிச்சென்றுள்ளார்.
அவரை பின் தொடர்ந்து வந்த போலீஸார் குழந்தையின் பயங்கரமான அலறலை கேட்டதும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நீர்மூழ்கி வீரர்களை வரவழைத்த காவல்துறையினர்,
40 நிமிட போராட்டத்திற்கு பிறகு கடலில் விழுந்த போப்பை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி அந்தக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் மனட்டி கவுண்டி அதிகாரிகள் ஜான்சுக்கை துரத்திப்பிடித்து கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி மைக்கேல் கெர்ரிடம் தகவல் தெரிவித்தனர். இருவரும் ஆறு வருடங்கள் ஒன்றாக இருந்தனர். அச்சமயம் அவர்களது குடும்பத்தில் நடைபெறும் சண்டை தொடர்பாக விசாரிப்பதற்காக அடிக்கடி காவல்துறையினர் வந்துள்ளனர்.
சம்பவம் நடந்த புதன்கிழமை அவர் பாலத்தில் இருந்து தன் மகளை தூக்கி வீசுவதற்கு சில மணி நேரம் முன்னர் தான் போபின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்காக ஜான்சுக்கின் வீட்டிற்கு அவரது வக்கீல் வந்துள்ளார். அப்போது அவரது நடவடிக்கைகள் வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பெற்றோர் செய்த தவறுகளால், ஒரு தவறும் செய்யாத குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

ConversionConversion EmoticonEmoticon