வெளியூர் பயணங்களின்போது தங்கும் விடுதிகளில் அந்தரங்கத்தை விழுங்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி?

வெளியூர் மற்றும் தேன்நிலவு பயண நிமித்தமாக அறிமுகம் இல்லாத ஊர்களில் உள்ள லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப் புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை நம்மில் பலரால் எளிதில் அறிந்துக் கொள்ள முடியாது.
thiruttu cameravai kandupiddipathu eppadi ஆனால், சற்று விழிப்புணர்வும் கூடவே புத்திச் சாதுர்யமும் இருந்தால் இத்தகைய ரகசிய கண்களை உங்களால் எளிதில் அடையாளம் காண முடியும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்:-
முதலில் வெளி வெளிச்சம் உள்ளே வராத அளவுக்கு நீங்கள் தங்கியிருக்கும் அறையின் கதவு, ஜன்னல்களை மூடுங்கள். பின்னர், உங்கள் செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள். சாதாரணமாக புகைப்படம் எடுக்கும்போது வெளிப்படும் ’பிளாஷ்’ வெளிச்சத்தை அணைத்துவிட்டு, அந்த அறையிலுள்ள நாற்புறச் சுவர் மற்றும் சுவற்றில் மாட்டி வைத்துள்ள அலங்கார வேலைப்பாடு மிக்க பொருட்களை வரிசையாக புகைப்படம் எடுங்கள்.
இப்போது, நீங்கள் எடுத்த புகைப்படங்களை உற்று கவனியுங்கள். அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும், அது இருட்டில் நீங்கள் எடுத்த புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும். இதைவைத்தே உங்கள் அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை அறிந்துக் கொள்ளலாம்.
இதேபோல், குளியலறைகளிலும் சில வக்கிர கும்பல் இதுபோன்ற காமிராவை ரகசியமாக பதுக்கிவைத்து, உங்களுக்கு தெரியாமல் உங்கள் அந்தரங்கத்தை பதிவு செய்யவும் வாய்ப்புள்ளது. ஷவரின் துளைகளுக்கு இடையிலும், முகம் பார்க்கும் கண்ணாடி, வாஷ் பேசின் ஆகியவற்றிலும் வெகு நுட்பமான கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம்.
இங்கேயும் விளக்குகளை அணைத்து விட்டு ‘பிளாஷ்’ இல்லாமல் உங்கள் செல்போன் மூலம் படம் பிடிப்பதன் மூலம் உங்கள் அந்தரங்கத்தை எந்த ரகசிய கண்களும் கண்காணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
Previous
Next Post »