உயிர் பறிக்கும் 'புத்தாண்டு கொண்டாட்டம்' தேவையா?

உயிர் பறிக்கும் 'புத்தாண்டு கொண்டாட்டம்' தேவையா?  
ஆங்கில புத்தாண்டை இந்தியாவில் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதைவிட கூடுதல் சிறப்புடன் ஆங்கிலேயர்களுக்கு நிகராக புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளன.

தமிழர் புத்தாண்டை விமர்சையாக கொண்டாடத தமிழர்கள் ஆங்கிலப் புத்தாண்டை கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
puthandu kondattam

கல்லூரி இளைஞர்கள் போன்றவர்கள் மது மற்றும் நண்பர்களுடன் ஸ்பீக்கர் வைத்து குத்தாட்டம் போடுகின்றனர்.

இதுபோன்ற கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாக இருப்பதாக இருந்தால் கொண்டாடுவதில் தவறில்லை.

ஆனால் தேவையற்ற ச்சஃசரவுகள், மோதல்கள் மற்றும் உயிர்பலிகும் இத்தகைய கொண்டாட்டங்களால் ஏற்படுவது வருந்த தக்கது...

ஒவ்வொரு புத்தாண்டின் ஆரம்பத்திலும் கொண்டாட்டங்களுக்கு இடையே சில உயிர்கள் பலியாக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?

நேற்று முன் தினம் கொண்டாடப்பட்ட புத்தாண்டு விழாக்களில் கல்லூரி மாணவர் ஒருவர் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார். இது எந்த வகையில் ஏற்புடையதல்ல....

எந்த ஒரு கொண்டாட்டங்களும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்க வேண்டுமே ஒழிய துக்கத்தை கொடுப்பதாக இருக்ககூடாது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

Previous
Next Post »