| கடலில் விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டி | ||
இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. தற்பொழுது விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால்தான் விமானம் விபத்துக்குள்ளான காரணம் தெரியவரும்.
ஜவா கடற்பகுதியில் மிதந்த 7 உடல்களை கைப்பற்றிய மீட்பு குழுவினர், கடலுக்கடியில் மிகப்பெரிய பொருள் மிதப்பதையும் சோனார் கருவி மூலம் கண்டறிந்துள்ளனர்.
அது விமானத்தின் உடைந்த உடல் பாகமாக இருக்கலாம் என கருதுகின்றனர். எனினும், மோசமாக சூழ்நிலையால் அந்த பகுதியை நன்கு பயிற்சி பெற்ற கடல் மூழ்கும் வீர்ர்களால்கூட நெருங்க முடியவில்லை.
அந்த பெரிய பகுதியை கண்டுபிடித்தால் கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதும் சுலபமாகும்.

ConversionConversion EmoticonEmoticon