| புலியாக மாறும் விஜய்! | ||
கத்தி படம் வெளி வந்து பயங்கர வசூல் வேட்டையை நடத்தியது.
முருகதாஸ் இயக்கதில் வெளிவந்த அந்த படம் பலத்த எதிர்ப்பு இடையில் வெளிவந்து, வெற்றி நடை போட்டது.
அதன் பிறகு விஜய் நடிக்கும் படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
அதற்கு விடை அளிக்கும் வகையில் அவர் 'புலி' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சிம்பு தேவன் இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு நடந்துவிட்டதாகவும், அடுத்த கட்ட படபிடிப்பு 'லிங்கா' படம் எடுக்கப்பட்ட பெங்களூர் தளத்தில் எடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் பெயர் 'புலி' என வைத்தால் பிரச்னைகள் வரும் என கருதி "மாரீசன்" என்ற பெயர் பரிசீலிக்கப் படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் கதைப்படி "புலி" டைட்டில்தான் கச்சிதமாக பொருந்தும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ConversionConversion EmoticonEmoticon