ரஜினியின் புதிய படம்; இயக்குனர் வாசு

ரஜினியின் புதிய படம்; இயக்குனர் வாசு 
பல விமர்சனங்களையும் தாண்டி, வசூலில் சாதனை ஏற்படுத்தியது ரஜினியின் லிங்கா சினிமா படம்.

வசூலின் அடிப்படையில் லிங்கா வெற்றிப்படமாக அமைந்தது. இதனை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
rajiniyin puthiya padam

பிரமாண்டத்திற்கு பெயர் போன 'ஐ' சங்கரின் இயக்கத்தில் அடுத்த படம் நடிப்பார் என தகவல்கள் இருக்க, சமீபத்தில் இயக்குனர் பி. வாசு ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியிருக்கிறார்.

அந்த கதை ரஜினிக்கு பிடித்துப்போக, அதற்கான முடிவு இன்னும் எடுக்காமல் உள்ளார்.

எப்படியும் இந்த வருடம் ரஜினி காந்தின் புதிய படம் கண்டிப்பாக இருக்கும் என சினிமா வட்டாரம் நம்புகிறது.


Previous
Next Post »