| உலகெங்கும் 'ஐ' ன் ஆக்கிரமிப்பு...! | ||
இயக்குனர் சங்கரின் பிரமாண்டமும், சீயான் விக்ரமின் வித்தியாசமான நடிப்பும், தொழில்நுட்பம் கலந்த புதிய கிராபிக்ஸ்ம்
ஐ
படத்தை ஹாலிவுட் ரேன்ஜ்க்கு மாற்றியுள்ளது.
தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐ படத்தை பற்றி பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியிருக்கும் கருத்தும் இணையத்தில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் ஜெயலிலிதா, ரஜினியைவிட சங்கர் பிரபலமானவராக உணர்கிறேன் என அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் ஐ படம் 144 தியேட்டர்களில் தமிழ் உட்பட மூன்று மொழிகளில் வெளியாவதும் புதிய ரெக்கார்ட் ஆக மாறியுள்ளது.
இதற்கு முன்பு இந்தி நடிகர் அமீர்கானின் படம் 250 தியேட்டர்களில் வெளியிடப்பட்டதே ரெக்கார்ட் ஆக இருந்தது.
சென்னை உட்பட தமிழகத்தில் ஐ படத்திற்கான தியேட்டர்கள் எல்லாமே ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது.
ரஜினியின் லிங்காவின் வசூலை முதல் நாளிலேயே "ஐ" படம் வசூலித்துவிடும் என சினிமா பக்கிகள் தெரிவிக்கின்றனர். தமிழ் படம் ஒன்று ஹாலிவுட் படத்திற்கு இணையாக எடுத்திருப்பது இதுவே முதல்முறை.
ஐ படத்தின் பிரமாண்டத்தின் முன்னால், மற்ற நடிகர்களின் படங்கள் பொங்கல் ரேஸிலிருந்து ஜாகா வாங்கியிருப்பதும் "ஐ" படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளது. குறிப்பாக அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளிவராது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி பட உலகையே திரும்பி பார்த்த விடயம் ஐ படத்தின் பிரமாண்டம்தான். அதில் இடம்பெறும் விக்ரமின் கேரக்டர்கள் மற்றும் உருவ அமைப்பு ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ஐ படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாகும் என்பதில் சந்தேகமில்லை.

ConversionConversion EmoticonEmoticon