| நானும் பிரபல நடிகைதான் - ஸ்ருதிஹாசன் | ||
சினிமாவில் என் வளர்ச்சி கண்டு தாய் பெருமை படுக்கிறார் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாகி இருக்கிறார். இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் லக். 2009–ல் இந்தியில் வந்தது.
தமிழில் சூர்யா ஜோடியாக 7–ஆம் அறிவு படத்தில் அறிமுகமானார். தொடந்து தனுஷ் ஜோடியாக 3 படத்தில் நடித்தார். விஷால் ஜோடியாக பூஜை படத்தில் நடித்தார்.
தற்போது விஜய் ஜோடியாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடனும் நடித்து வருகிறார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றுள்ளார்.
இதை நினைத்து தான் அவரது தாய் சரிகா பெருமைப் படுகிறாராம். தங்கை அக்ஷரா இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.
இது குறித்து சுருதிஹாசன் கூறும் போது, 2014 எனக்கு மகிழ்ச்சியான வருடமாக அமைந்தது. நிறைய படங்களில் நடித்தேன். 2015–ம் ஆண்டும் எனக்கு சந்தோஷமாக இருக்கும் என நம்புகிறேன்.
உதவியாக இருந்த எல்லோருக்கும் நன்றி. என்னையும் அக்ஷராவையும் நினைத்து எனது தாய் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்.
மகள்களை நினைத்து பெருமை படவும் செய்கிறார். சிறுவயதில் இருந்தே எங்களை அன்பாக பார்த்துக் கொண்டார். பாசம் காட்டி வளர்த்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

ConversionConversion EmoticonEmoticon