2015 ல் அஜீத்தான் நம்பர் 1: ஜோதிடர் கூறிய ரகசியம்..!

தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறப்படுபவர் 'தல' அஜீத். பயங்கரமான மாஸ் நடிகர் இவர். இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளாம். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும், அவருடைய ரசிகர் மனதிலிருந்து என்றுமே கலையாதிருப்பவர்.

வீண் விளம்பரங்கள் இவருக்கு பிடிக்கவே பிடிக்காது. செய்யும் உதவிகளை மீடியாவுக்கு கொண்டு செல்லாமல் பார்த்துகொள்பவர்.

ajith super star 2015

அஜீத் தும்மினால் கூட அதை ஒரு ஹேட் டேக் செய்து ட்விட்டரில் டெரெண்டாக மாற்றிவிடுகின்றனர் அவரது ரசிகர்கள்.

சமீபத்தில் தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்று, ராசி, பலன் குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது. இதில் தொகுப்பாளர் இந்த வருடம் எந்த நடிகர்கள் படம் நன்றாக ஓடும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஒரு ஜோதிடர் அஜித் தான் இந்த வருடம் நம்பர் 1, அவரது படங்கள் வசூலில் பட்டையை கிளப்பும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனுஷும் இந்த வருடத்தில் பெரிய உயரத்தை அடைவார் என்று கூறியுள்ளார். அஜித் தற்போது என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள். இந்த படம் ரிலீஸுக்கு பின்பு தெரியும் என்ன நடக்கிறது என்று.
Previous
Next Post »